முதல்வர் வேட்பாளராக அன்புமணி: சித்திரை முழு நிலவு விழாவை கைவிட்டது வன்னியர் சங்கம்

முதல்வர் வேட்பாளராக அன்புமணி: சித்திரை முழு நிலவு விழாவை கைவிட்டது வன்னியர் சங்கம்
Updated on
1 min read

பாமக சார்பில் அன்புமணி முதல் வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு விழா நடத்துவதை வன்னியர் சங்கம் கைவிட்டுள்ளது.

வன்னியர் சங்கம் தோற்றுவிக் கப்பட்ட பிறகு தமிழகத்தில் தேர் தல் நடைபெற்ற ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் அச்சங்கத்தால் மாமல்லபுரத்தில் சித்திரை மாதத் தில் வரும் பவுர்ணமி தினத்தன்று ‘சித்திரை முழு நிலவு விழா’ நடத்தப்பட்டு வந்தது.

மாமல்லபுரத்தில் கடந்த 2012-ல் நடைபெற்ற விழாவின்போது, மரக் காணத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரம், விழாவில் ராம தாஸ், எம்எல்ஏ குரு ஆகியோரின் சர்ச்சை பேச்சு, இதனால் அவர்கள் கைதானது, அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் பாமகவினர் 134 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டது போன்ற தொடர் நிகழ்வுகளால் சித்திரை முழு நிலவு விழா பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த 2013-ல் விழா நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்தது. 2014-ல் தேர்தல் நடத்தை விதிகளை சாதக மாக பயன்படுத்திக் கொண்ட மாவட்ட காவல்துறை, அப்போதும் விழா நடத்த அனுமதி அளிக்க வில்லை. இந்த ஆண்டு அனுமதி கேட்டு யாரும் காவல்துறையில் விண்ணப்பிக்கவில்லை. நாளை (மே 3) சித்திரை மாத பவுர்ணமி நாள் வருகிறது. ஆனால், விழா நடத்துவதை வன்னியர் சங்கம் கைவிட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக் கப்பட்டுள்ளார். இந்நிலையில் சித்திரை முழு நிலவு விழா நடத்தினால், அவருடைய செல் வாக்கு பாதிக்கப்படும். எனவே அதற்கு பதிலாக 5 மாவட்டங் களுக்கு ஓர் இடத்தில் பாமக மண் டல மாநாடுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. முதல் மாநாடு எம்எல்ஏ குருவின் தொகுதியான ஜெயங்கொண்டத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் மாவட்டந்தோறும் மது ஒழிப்பு போராட்டங்களும் நடத் தப்பட உள்ளன” என்று கூறினார்.

மாநில பாமக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி, அனைத்து தரப்பு மக்களாலும் பொது வேட்பாளராக ஏற்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் விழா நடத்துவதும், அதில் அன்புமணி பங்கேற்பதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே இந்த ஆண்டு விழா நடத்த வாய்ப்பில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in