புதுச்சேரியில் 88.16% பிளஸ் 2 தேர்ச்சி: 2 மாணவிகள் முதலிடம்

புதுச்சேரியில் 88.16% பிளஸ் 2 தேர்ச்சி: 2 மாணவிகள் முதலிடம்
Updated on
1 min read

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.45 சதவீதம் குறைவு.

புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை முதல்வர் அறையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

புதுச்சேரி காரைக்கால் பிராந்தியங்களில் 14,250 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,563 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.16. கடந்த ஆண்டை விட 1.45 சதவீதம் குறைவு. மாணவர்களில் 85 சதவீதமும், மாணவிகளில் 90.85 பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தைபோல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்துஜா, நிகிதா ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தனர்.

பெத்தி செமினார் பள்ளி மாணவர் ஹரீஷ் பாலாஜி 1186 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், செயின்ட் பேட்ரிக் பள்ளி மாணவி பிரதிக்ஷா 1182 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

புதுச்சேரியில் 35 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசுப்பள்ளி இடம்பெறவில்லை. காரைக்கால் பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 4.3 சதவீதம் மொத்தமாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வரிடம் கேட்டதற்கு, "ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

வரும் ஜூன் மாதம் பள்ளி திறக்கும் முன் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அத்துடன் பொதுத்தேர்வுக்கு முன்பு தனியார் பள்ளிகள் மாணவர்களை வெளியேற்றி விடுகின்றனர். அவர்களையும் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தல் கடிதமும் அனுப்பியுள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in