

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்த கத்தை அடுத்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து, புகையுடன் கருந் துகள்களும் கலந்து வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
1961 முதல் செயல்படும் இந்த சர்க்கரை ஆலைக்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திண்டிவனம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து அரவைக்கு கரும்பு வருகிறது. அரவை நேரத்தின்போது, ஆலை யிலிருந்து கரும்புகை வெளியே றும். குறிப்பாக, இந்தப் புகை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வடிகட்டி வெளியேற்றப்படும்.
இதனிடையே, ஆலையில் உள்ள புகையை வடிகட்டும் இயந் திரத்தின் ஒரு பிரிவு கடந்த மாதம் பழுதாகி விட்டதாகக் கூறப்படு கிறது. இதனால், தற்போது ஆலையி லிருந்து வெளியேறும் கரும் புகையில் கருந் துகள்களும் கலந்து வெளியேறுகின்றன.
இந்த கருந் துகள்கள் ஆலை யைச் சுற்றி அமைந்துள்ள கிராமங் களில் படிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாகவும், சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மீது விழுந்தால், கண் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் நேரு கூறியதாவது:
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புகையை வடி கட்டி வெளியேற்றும் இயந்திரம் பழுதாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், ஆலையிலிருந்து புகையு டன் ஒருவிதமான கருந் துகள்களும் கலந்து வெளியேறி, சுற்றியுள்ள கிராமங்களில் படிகின்றன. இந்த கருந் துகள் கண்ணில் பட்டு எரிச் சலை உண்டாக்குவதால், குழந்தை கள் உட்பட அனைவரும் பாதிக் கப்படுகின்றனர். இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் முறையிட் டும் நடவடிக்கை இல்லை. எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தோம் என்றார்.
இதுகுறித்து படாளம் கூட்டு றவு சர்க்கரை ஆலையின் கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெங்கட் ராமன் கூறும்போது, ‘சர்க்கரை ஆலையில் உருவாகும் புகையை, மாசு ஏற்படாதவாறு வடிகட்டி வெளியேற்றும் இயந்திரத்தின் பிரிவு ஒன்று பழுதாகியுள்ளதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பழுதை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதை சீரமைக்க மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 29-ம் தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது புகையேதும் வெளியேற்றப்படவில்லை என்றார்.