

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய புதுக்கோட்டை கிளை சிறையிலுள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சே.சங்கர்பாண்டி(385), என்.மாரிக்கனி(379), பி.பிரபாகரன்(367) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
இவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குருநாதசுந்தரம், ஜெயராமன், செந்தில்குமார், ராமச்சந்திரன், சாந்தி, வேல்முருகன் ஆகியோர் கற்பித்தனர். தேர்ச்சி பெற்றவர்களை கல்வித் துறையினர் மற்றும் சிறைத் துறையினர் பாராட்டினர்.