

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலையில் மருத் துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு, அவர் அவசர வேலை காரண மாக வெளியே சென்றார். மீண்டும் மாலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதியானார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.