Published : 15 May 2015 07:11 AM
Last Updated : 15 May 2015 07:11 AM

6 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று தற்காலிக நிறுத்தம்

சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாக னங்களில் நேற்று ஆய்வு நடை பெற்றது. இதில், பாதுகாப்பு குறைபாடு இருந்த 6 பள்ளி வாக னங்களுக்கு தகுதிச் சான்று தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நந்தனத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியில் போக்குவரத்து ஆணையரக இணை ஆணையர் வீரபாண்டியன் (நிர்வாகம்), கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார், கல்வித்துறை அதிகாரி கந்தசாமி, வருவாய்த்துறை அதிகாரி விமலா மற்றும் வாகன ஆய்வாளர்கள் செழியன், விஜயக்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் கூறும்போது, ‘‘பள்ளி வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். எங்கள் எல்லைக்கு உட்பட்ட 16 பள்ளிகளுக்கு சொந்தமான 63 வாகனங்களில் நேற்று 30 வாகனங்களில் ஆய்வு நடத்தப் பட்டது. ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x