

சென்னை மாநகரட்சியில் சுகாதார மற்ற கழிப்பிடங்கள், திறந்தவெளி கால்வாய்கள், ரயில்வே பாதை களில் உள்ள மனிதக் கழிவுகளை சுமத்தல், சுத்தம் செய்தல், அகற்றல் பணியில் இருப்பவர்கள், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை கைகளால் சுத்தம் செய்பவர்கள் ஆகியோரை கணக்கெடுக்கும் பணி நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த கணக்கெடுப்பின் வரைவு முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளன. இதன்படி சென்னையில் 248 தொழிலாளர்கள் உள்ளனர்.
திருவொற்றியூர் மண்டலத்தில் 35 பேர், மணலி மண்டலத்தில் 22 பேர், மாதவரத்தில் 8 பேர்,தண்டையார்பேட்டையில் 8 பேர், ராயபுரத்தில் 6 பேர், திரு வி.க.நகரில் 21 பேர், அம்பத்தூரில் 15 பேர், அண்ணாநகரில் 10 பேர், கோடம்பாக்கத்தில் 5 பேர், வளசரவாக்கத்தில் 9 பேர், ஆலந்தூரில் 8 பேர், அடையாரில் 15 பேர், பெருங்குடியில் 31 பேர், சோழிங்கநல்லூரில் 55 பேர் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்த பட்டியலில் நீக்கல், சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல அலு வலகங்களில் கிடைக்கும் படிவங் களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.