மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையம்: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தொடக்கம்

மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையம்: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தொடக்கம்
Updated on
1 min read

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையம்’ விரைவில் செயல்பட உள்ளது.

சென்னையில் கடந்த 2008-ல் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். ஹிதேந்திரனின் இதயம், 9 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு, தமிழக மக்க ளிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘மூளைச் சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம்’ உரு வாக்கப்பட்டது. திட்டத்தின் ஒருங் கிணைப்பாளராக அமலோற்பவ நாதன் நியமிக்கப்பட்டார். இதற் கான தலைமை அலுவலகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல் பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்து மற்றும் உடலில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இதயம், கல்லீரல், நுரை யீரல், சிறுநீரகங்கள், கண்கள் உட் பட பல்வேறு உடல் உறுப்புகள் தான மாக பெறப்பட்டு தேவையானவர் களுக்கு பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த ஆறரை ஆண்டு களில் மூளைச் சாவு அடைந்த 630-க் கும் மேற்பட்டோரின் உடல் உறுப்பு களை, அவர்களின் உறவினர்கள் தானம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக உடல் உறுப்புகள் மாற்றுக்கு என்று தனியாக ‘மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையம்’ அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த ஆணையத்தின் செயல் உறுப்பினராக அமலோற்பவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 வாரங்களில் உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயல்படத் தொடங்கும்.

இது தொடர்பாக மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் செயல் உறுப்பினருமான அமலோற் பவநாதன் கூறும்போது, ‘உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் மூலம் மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து மட்டுமே உறுப்புகள் தானமாக பெற முடியும். ஆனால், உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலமாக உயிருடன் இருப்பவர்களிடம் இருந்தும் உறுப்புகளை தானமாக பெறலாம். உயிருடன் இருப்பவர்கள் செய்யும் உறுப்புகள் தானத்தையும் கண்காணிக்க முடியும்.

விரைவில் உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயல்படத் தொடங்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in