

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதற்கு தனது தனிச் செயலாளர் வெற்றிச்செல்வன் கொலையே சான்று என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன்.
நேற்று அரியலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை. எனக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு வெற்றிச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பதே சான்று. அவரது கொலைக்கு காரணமான சமூக விரோதிகளை காவல் துறையினர் விரைந்து கைது செய்யவேண்டும் என்றார்.