

இல்மி அறக்கட்டளையின் நிறுவனர் எஸ். சம்சுதீன் காஸிமி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினரின் கல்வி, வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு இல்மி ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட் டது. இதன் மூலம் ஏழை மாண வர்களுக்கு முதல் ஆண்டிலேயே முகம்மது அஷ்ரப் என்ற மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற் றுள்ளார். 22 பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தேர்வில் பெற்றுள்ளனர். 2-வது குழுவில் 65 மாணவர்கள் சென்னை அகாடமியிலும், 10 மாணவர்கள் எங்களது டெல்லி கிளையிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சிறப்பு மதிப்பெண் பெறுவோருக்கு இலவச உயர் கல்வியும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இத்திட்டத்தில் 150 மாணவர்களை தத்தெடுக்க உள்ளோம். 10-ம் வகுப்பில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் www.ilmi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.