

பன்னாட்டு திருக்குறள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் 70 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக் கப்பட்டன.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சென்னை பல்கலைக் கழகம் சார்பில் 2 நாள் பன்னாட்டு திருக்குறள் மாநாட் டின் தொடக்க விழா எழும்பூர் அரசு அருங்காட்சியக கூட்ட அரங்கில் நேற்று நடை பெற்றது. மாநாட்டை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
தமிழ் மொழிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத் துவம் கொடுப்பவர் ஜெய லலிதா. திருவள்ளுவர் பெயரில் தனியாக ஒரு பல் கலைக்கழகத்தை ஏற்படுத்தி யவரும் அவர்தான். தமிழ்ச் சான்றோர்களையும், அறிஞர்களையும் கவுரவிக்கும் வகையில் 41 வகையான விருது களை நிறுவியுள்ளார்.
சாதி, சமயம், இன வேறு பாடுகளை கடந்த மனித குல மேம்பாட்டுக்கு வழிகாட்டு கிறது திருக்குறள். இதில் சொல்லப்பட்டுள்ள நெறிக ளின்படி தமிழகத்திலே முறை யான ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் பழனியப் பன் கூறினார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி மாநாட்டு மலரை வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை செய லர் மூ.ராஜாராம், சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.தாண்டவன், சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக் கழக பேராசிரியர் ஆர்.வேல் முருகன், உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து ஆகியோர் வாழ்த் திப் பேசினர்.
பல்வேறு தலைப்பு களில் ஆய்வரங்க அமர்வுகள் நடத்தப்பட்டன. 632 பக்கங் களில் 70 ஆய்வுக்கட்டு ரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த 2 நாள் மாநாடு இன்று முடிவடைகிறது.