ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்

ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்
Updated on
1 min read

பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்தவர் முருகன். இவர் ஏப்.1-ம் தேதி ஓய்வுபெற இருந்தார். இவரை மார்ச் 30-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மண்டல மேலாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: பணியிடை நீக்கம் என்பது தண்டனையல்ல. அது ஒரு இடைக்கால நடவ டிக்கை மட்டுமே. மேலும் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் ஒருவரை பணியிடை நீக்கம் செய்யக்கூடாது என எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. மனுதாரரின் மனுவை அனு மதித்தால், பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் ஊழல் செய்து விட்டு பணியிடை நீக்கம் செய்ய முடியாது என பலர் நீதிமன்றத் துக்கு வருவர். மேலும், பணியிடை நீக்கம் செய்ய மண்டல மேலா ளருக்கு அதிகாரம் உண்டு. மனுதாரருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு ள்ளது. அவற்றின் மீது ஒரு ஆண்டுக்குள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in