

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத் தில், நேற்று விவாதமின்றி தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டதைக் கண்டித்து, திமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சர்தார் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும், வழக்கிலிருந்து விடுபட்டு, தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, திமுக கவுன்சிலர் ஜெகன் குறுக்கிட்டுப் பேசினார். இதனால், அனைத்து தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டதாக நகர்மன்றத் தலைவர் அறிவித்து விட்டு, கூட்ட அரங்கி லிருந்து வெளியேறினார்.
விவாதமின்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைக் கண் டித்து திமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கின் கதவை மூட முயன்றனர் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி அலுவல கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக கவுன் சிலர் சுரேஷ் கூறும்போது, ‘குடிநீர்த் தட்டுப்பாடு, அம்மா உணவகத் துக்கு அனுமதியின்றி நகராட்சி நிதியை செலவு செய்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவிருந்தோம். இதனால், நகர்மன்றத் தலைவர் விவாதமின்றி 64 தீர்மானங்களை நிறைவேற்றி அறிவித்துவிட்டார். அதைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். போலீஸார் சமாதானத்தால் கலைந்து சென்றோம்’ என்றார்.