

சென்னை அபிராமபுரம் ராதாகிருஷ்ணபுரம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர்கள், இரவு நேரங்களில் தங்களுடைய ஆட்டோக்களை அடை யாறு கிரீன்வேஸ் சாலையில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு செல்வார்கள்.
நேற்று முன்தினம் இரவு கிரீன்வேஸ் சாலையில் நிறுத்தப் பட்டிருந்த 20 ஆட்டோக்களின் டூல்ஸ் பாக்ஸ்களை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.20 ஆயி ரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். இதுதொடர்பாக ஆட்டோ டிரை வர்கள் அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்து போலீ ஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.