பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தில் பிளவு: பொறியாளர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் அறிக்கை

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தில் பிளவு: பொறியாளர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் அறிக்கை
Updated on
1 min read

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தைச் சேர்ந்த 59 பேர், பொறியாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், சங்கத்தில் பிளவு ஏற்பட் டுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது ஊழல் புகார் கூறி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பேனர் வைக்கப்பட்டது. மேலும், 10 அதிகாரிகளின் பெயர் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பொறி யியல் ஒப்பந்ததாரர் சங்கத்தினர் வழங்கினர். இதையடுத்து பொதுப் பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தி னர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்ததாரர் கள் சங்கத்தைச் சேர்ந்த 59 பேர், பொறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட் டுள்ளனர். அதில் கூறியிருப்ப தாவது:

கடந்த 9-ம் தேதி தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சிலர், பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் 10 பொறி யாளர்கள் ஊழல் புரிந்ததாக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பரப்பப்பட்ட பொய் யான செய்தி.

இந்தக் குற்றச்சாட்டு, எங்கள் சங்க விதிப்படி செயற் குழுவையோ, பொதுக்குழு வையோ கூட்டாமல் அவர்களே தன்னிச்சையாக வெளியிட் டுள்ளனர். சுமார் 130 உறுப்பினர் களைக் கொண்ட சங்கத்தில் வெறும் 5 பேர் மட்டும் தங்கள் சுயலாபத்துக்காக எடுத்த தவறான முடிவு இது.

புகார் கூறப்பட்டுள்ள பொறி யாளர்கள் யாரும், எந்த ஒப்பந்த தாரரிடமும் பணம் கேட் டதில்லை. பொய்யான செய்தியை மறுத்து அறிக்கை கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதால் இந்த அறிக்கையை வெளியிடு கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இந்த அறிக்கையால் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் குணமணி கூறும்போது, ‘‘யார் குற்றவாளிகள் என்பது விரைவில் தெரியவரும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in