Published : 27 Mar 2014 11:58 AM
Last Updated : 27 Mar 2014 11:58 AM

ஜெயலலிதா ஆட்சிக்கு மக்கள் ஓவர் சொல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தேர்தல் நேரத்தில் மட்டும் ஜெயலலிதா மக்களை சந்திக்க வருகிறார் என அரக்கோணத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி ஏற்பட வேண்டும். நாங் கள் தேர்தலுக்கு மட்டும் வந்து செல்லவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டையும் மக்களைப் பற்றியும் கருணாநிதி கவலைப்படுவார். ஆனால், ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருவார். அதுவும் ஹெலிகாப்டரில் வருவார்.

அவர் வானத்தில் செல்லும் போது போலீஸார் கீழே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஹெலி காப்டரில் அம்மா புறப்பட்டு விட்டார் ஓவர், ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஓவர் என போலீ ஸார் வயர்லெஸ்சில் கூறுவார் கள். அவரது ஆட்சிக்கு மக்கள் ஓவர் சொல்ல வேண்டும். நான் உங்களிடம் ஓட்டு கேட்க உரிமையோடு வந்திருக்கிறேன். தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2006-11-ம் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டன.

எம்எல்ஏ அலுவலகம், ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. அரக் கோணம் ஆத்தூர் தரைப்பாலம், ரூ.4 கோடியில் தக்கோலம்- அனந்தாபுரம் தரைப்பாலம், ரூ.3 கோடியில் உரியூர்- அனந்தாபுரம் பாலம், அரக்கோணம்- திருத்தணி சாலையில் மேம்பாலம், அரக் கோணம் சோளிங்கரில் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டங்களும் செயல்படுத்த வில்லை. திமுக ஆட்சியில் அரக் கோணம் நகராட்சியில் தொடங்கிய பாதாள சாக்கடை திட்டம் கிடப் பில் போடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x