

சதுரகிரி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.கா. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க, தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியான மேலும் 4 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் நடந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.