Published : 31 May 2015 12:15 PM
Last Updated : 31 May 2015 12:15 PM

மண்ணில் தங்கத் துகள் இருப்பதை உணர்த்தும் ‘ஈக்யூ சிட்டம்’ தாவரம்: திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் கண்டுபிடிப்பு

மண்ணில் தங்கத் துகள் இருப் பதைக் கண்டறியும் ‘ஈக்யூ சிட்டம்’ தாவரங்கள், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப் பகுதியில் அதிக அளவில் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் தென் அமெரிக்கா வில்தான் அதிக அளவு தங்கம் கிடைக்கிறது. அங்கு 10 கிலோ மண்ணில் 500 மில்லி கிராம் தங்கம் கிடைக்கிறது. இந்தியாவிலோ ஒரு டன் மண்ணில் ஒரு மில்லி கிராம் மட்டுமே தங்கம் கிடைக்கிறது.

மண்ணை வெட்டி தங்கத்தைப் பிரித்தெடுக்க ஆகும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிக மாவதால், தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

மண்ணில் தங்கம் இருப்பதைக் கண்டறியும் ‘ஈக்யூ சிட்டம்’ என்ற ஒருவகை தாவரங்கள், ஆஸ்திரே லியா, நியூசிலாந்து, தென் அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் மிக அபூர்வம்.

தற்போது தமிழகத்தில் திண் டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அரளிக்காடு வனப் பகுதியில் இவ்வகை தாவரங்கள் அதிகளவு வளர்ந்திருப்பதை காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக தாவர வியல் பேராசிரியர் இரா. ராமசுப்பு தலைமையிலான ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘‘இந்தத் தாவரங்கள் மண்ணில் படிந்திருக்கும் தங்கத் துகள்களை திசுக்களில் சேகரித்து வைக்கும். இந்தத் தாவரங்கள் இருப்பதை வைத்து, அப்பகுதியில் தங்கத் துகள் இருப்பதை உறுதி செய்யலாம்’’ என்கிறார் பேராசிரியர் ராமசுப்பு.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

‘‘இந்தத் தாவரக் குடும்பத்தில் 30 வகை தாவரங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களில் ‘ஈக்யூ சிட்டம்’ ரோஸ்மார்னியம் வகை தாவரமும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் தற்போது சிறுமலையில், ‘ஈக்யூ சிட்டம்’ ஆர்சனியம் என்ற வகை தாவரமும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

இந்தத் தாவரத்தில் காணப்படும் ஆர்சனிக் வேதிப் பொருள் உயிரி ழப்பை ஏற்படுத்தும் விஷத் தன்மை யுடையது. ஆர்சனிக் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், இந்தத் தாவரங்கள் விஷமாக மாறிவிடும். இந்தத் தாவரப் புற்களை மேயும் வன விலங்குகள், தயமின் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டு இறந்துவிடும். சிறுமலையில் சமீபத்தில் காட்டு மாடுகள், இந்தத் தாவரங்களை சாப்பிட்டு இறந்ததை ஆய்வில் உறுதி செய்துள்ளோம்.

இந்தத் தாவரத்தில் உள்ள ஆர்சனிக் கெமிக்கல் அளவைக் கொண்டு, மண்ணில் இருக்கும் தங்கத்தின் அளவை கண்டுபிடிக்க லாம். இந்தத் தாவரங்கள் களைக்கொல்லிக்கு சாகாமல் தாங்கி வளரும் தன்மையுடையவை. இதைச் சாப்பிடும் மனித உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

இதேபோல, மண்ணில் வைரத்தை கண்டறியும் வல்லலோ சியா கான்டிடா, வெள்ளி இருப் பதை உறுதி செய்யும் எரியோ கோனியம் ஒவாலி போலியம் தாவரங்களும் உலகில் உள்ளன. இந்தத் தாவரங்கள், இந்தியாவில் இல்லை.

100 மில்லியன் ஆண்டாக...

இந்தத் தாவரங்கள் 100 மில் லியன் ஆண்டாக உருமாற்றம் அடையாமல் உள்ளன. டைனோசர் காலத்தில் இருந்தே உள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் களைச்செடிகளாக அதிகளவில் பரவியுள்ளன. இவை தங்கத் துகள்களை சேகரிக்கும் ஆற்றல் பெற்றவை என்றாலும், இதுவரை இந்தத் தாவரத்தை கொண்டு தங்கத் துகள்களை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வில்லை.

ஆனால், இந்தத் தாவரத் தின் மூலம் மண்ணில் இருக்கும் தங்கத் துகளின் அளவு மற்றும் அதைக் கண்டுபிடிக்கும் திறன் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x