

அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
மருத்துவமனை இயக்குநர் ஹரிஷ் மணியன் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ பட்டமேற்படிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி (சண்டிகர்) நரம்பியல் துறை கூடுதல் பேராசிரியரும், இந்திய பக்கவாத சிகிச்சை சங்கத்தின் தலைவருமான டாக்டர் தீரஜ் கருணா பக்கவாத சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் தினேஷ் நாயக், பக்கவாத சிகிச்சை மையத்தின் ஆலோசகர் டாக்டர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.