

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் த.சிவஜோதி `தி இந்து’ செய்தியாளரிடம் நேற்று கூறியது:
ஆதார்விவரங்களை பெறுவது உட்பட 2 கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த விவரங்களை கனிணியில் இணைக்கும் பணியை மே 31-க்குள் முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் ஏற்கெனவே நடந்துள்ள பணிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் தோறும் ரூ.2.50 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இதை வழங்கும் படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏப். 28-ல் வலியுறுத்தினோம். இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் பணியை வேகப்படுத்து கின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய கால அவகாசத்தைக் கூட வழங்க மறுக்கின்றனர். பல மாவட்டங்களில் 100 சதவீத ஆதார் விவரங்கள் பெறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரிகள் காட்டிய அவசரம் காரணமாக, தவறான தகவல்கள் வழங்கும் வாய்ப்புள்ளது. நிதி, கால அவகாசம் வழங்கும் வரை தேர்தல் பணியை புறக் கணிப்போம்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் ஆணைய த்துக்கும் தெரிவித்து விட்டோம். இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி பாதிக்கப்படும் என்றார்.