சென்னை மாநகரின் மக்கள்தொகை 67 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

சென்னை மாநகரின் மக்கள்தொகை 67 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

சென்னையின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்து பல மாநிலங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கான சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் வரைவு பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள்:

சென்னையின் மொத்த மக்கள் தொகை 66,97,153.

மண்டலவாரியாக..

திருவொற்றியூர் 3,22,600. மணலி 92,795. மாதவரம் 1,94,939. தண்டையார்பேட்டை 4,24,277. ராயபுரம் 4,17,835. திருவிக நகர் 11,09,287. அம்பத்தூர் 4,83,357. அண்ணா நகர் 5,75,016. தேனாம்பேட்டை 5,85,899. கோடம்பாக்கம் 6,04,888. வளசரவாக்கம் 3,67,465. ஆலந்தூர் 2,32,974. அடையாறு 8,60,084. பெருங்குடி 2,32,482. சோழிங்கநல்லூர் 1,93,255.

வீடுகள் எண்ணிக்கை

சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், மணலி மண்டலத்தில் குறைந்தபட்சமாக 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன.

இது தவிர தொழில், கல்வி, சாதி, வருமானம், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட சமூக பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் இந்த வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 26-ம் தேதி இறுதிசெய்யப்படும். அதை பொதுமக்கள் பார்வையிட்டு திருத்தங்கள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வார்டு, மண்டல அலுவலகங்களில் மேற்கண்ட தேதிக்கு முன்பு வழங்கவேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in