

தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கும் 7 மின் நிலையங்களில் உள்ள 8 அலகு களில் 2,750 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத் தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக மின் பற்றாக்குறை ஓரளவு குறைந் திருந்தது. இதன்காரணமாக மின் வெட்டு நேரமும் பெருமளவு குறைக்கப் பட்டது. ஒரு சில நாட்களில் மட்டும் அவ்வப்போது மின் வெட்டு அமலா கிறது. அதேநேரம் பராமரிப்புப் பணி காரணமாக ஆங்காங்கே காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான மின் தடை முன் அறிவிப்புடன் அமல்படுத் தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை 9,900 மெகாவாட்டாக சரிந்தது. 7 மின் நிலையங்களிலுள்ள 8 அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 900 மெகாவாட், கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 220 மெகாவாட், ஆந்திராவிலுள்ள தமிழகத்துக்கு மின்சாரம் தரும் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட், எண்ணூரில் இரண்டு அலகுகளில் 170 மெகாவாட், வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலைய முதல் அலகில் 600 மெகாவாட், நெய்வேலி மின் நிலையத்தில் விபத்தால் பாதிக்கப்பட்ட ஏழாம் அலகில் 100 மெகாவாட் மற்றும் நெய்வேலி நிலையத்தின் மூன்றாம் அலகில் 50 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் நான்காம் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தியும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்பட் டுள்ளது. இந்த அலகில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், ஒரு மாதத் துக்கு இங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அரசு மற்றும் தனி யார் அலுவலகங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் விடுமுறை என்பதால், மின் வெட்டை அமல்படுத்தாமல் மின் துறை அதிகாரிகள் நிலைமையை சமாளித்தனர்.