Published : 26 May 2015 10:26 AM
Last Updated : 26 May 2015 10:26 AM

போத்தனூர் அஞ்சலகத்துக்கு வயது 150 - விழா எடுக்குமா அஞ்சல் துறை?

கோவையில் முதன்முதலாக அமைந்த போத்தனூர் அஞ்சலகம், இந்த ஆண்டு 150 வயதை எட்டியுள்ளது. இதை எளிமையான முறையிலாவது கோவை கோட்ட அஞ்சல் துறையினர் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக் கின்றனர் அஞ்சல் துறைமீது கரிசனம் கொண்டுள்ள ஆர்வலர்கள்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அஞ்சலக அதிகாரி ஹரிஹரன் கூறிய தாவது: நம் நாட்டில் ஆங்கிலேயர் கள் ஆங்காங்கே குடியேறிய போது, கோவையில் குளுமை யான போத்தனூரில் குடியேறினர். அந்த வரலாற்றின் அடையாளச் சின்னமாக ஆங்கிலோ இந்தியன் சர்ச் இங்கு உள்ளது. ஆங்கிலோ இந்தியர்கள்தான் ரயில்வே பணியில் மிகுதியாகப் பங்கெடுத்தனர். கோவையில் ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசிப்பதும் போத்தனூரில்தான்.

கோவை மாவட்டத்தின் முதல் ரயில் நிலையமும், ரயில்வே பயிற்சிப் பட்டறையும், ரயில்வே பணிமனையும் போத்தனூரில் அமைந்தன. ரயில் நிலையங்கள் எங்கெல்லாம் அமைந்தனவோ, அங் கெல்லாம்தான் அஞ்சலகங்களும் அமைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் ரயில் நிலையம் உட்பட அனைத்து வசதி களும் போத்தனூரில் 1.10.1865-ல் உருவாக்கப்பட்டது. ஒரே இடத்தில், சொந்தக் கட்டிடத்தில் இயங்கும் அஞ்சலகமாக இது விளங்குகிறது.

கோவை கோட்டத்தில் 2 தலைமை தபால் நிலையங்கள், 82 இலாகா தபால் நிலையங்கள், 97 கிளை அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன. சொந்தக் கட்டிடத்தில் இயங்கிவரும் தபால் நிலை யங்கள் 12.

100 ஆண்டுகளைக் கடந்த அஞ்சலகங்கள் போத்தனூர் உட்பட 3 மட்டுமே. 1908-ல் லாலி ரோடு வேளாண் கல்லூரி அஞ்சலகமும், 1914-ல் கோவை கடைவீதி அஞ்சல கமும் தொடங்கப்பட்டன. மூத்த அஞ்சலகமான போத்தனூர், இந்த ஆண்டு 150 வயதை எட்டியுள்ளது.

அஞ்சல்தலை சேகரிப்பு என்பது எப்படி மாணவர்களுக்கும், வருங் கால சந்ததியினருக்கும் வரலாற்றைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதோ, அதற்கும் ஒரு படி மேலாக, நூற்றாண்டுகளைக் கடந்த அஞ்சலகங்களுக்கும் விழா எடுத்து கொண்டாடினால்தான் இதன் பெருமை நம் சந்ததியினருக்கு தெரியவரும்.

இவ்வாறு ஹரிஹரன் கூறினார்.

அஞ்சல் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘இந்த அஞ்சலகத்துக்கு விழா கொண்டாட வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலர்கள்தான் கல்வெட்டு உள்ளிட்ட உரிய ஆவணங்களை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டுபோக வேண்டும். அப்படியே கொண்டுபோனாலும் அதற்கென உள்ள பிரிவில், மேலும் ஆதாரங்களைத் தேடி எடுக்குமாறு கேட்பார்கள். இருக்கிற பணிப் பளு, பணியாளர் பற்றாக்குறையில் இதைச் செய்ய முடியுமா? அப்படியே புள்ளிவிவரங்களை எடுத்துக் கொடுத்தாலும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x