

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக சென்ட்ரல் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்ட்ரல் பகுதியில் போக்குவரத்து மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்ட்ரலில் இருந்து பாரிமுனை செல்லும் வழியில், சென்னை மருத்துவக் கல்லூரி அருகே சாலையின் நடுவில் நேற்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் 5 அடி அகலத்துக்கு இந்த திடீர் பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து பள்ளத்தைச் சீர்படுத்தினர்.