தொழிலாளர்கள் நலனுக்கு எப்போதும் துணை நிற்போம்: மே தின உரையில் ஸ்டாலின் உறுதி

தொழிலாளர்கள் நலனுக்கு எப்போதும் துணை நிற்போம்: மே தின உரையில் ஸ்டாலின் உறுதி
Updated on
1 min read

ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொழிலாளர்கள் நலனுக்காக திமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மே தினத்தை முன்னிட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர் வளையம் வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

உழைப்பாளர்களின் பெருமை யைச் சொல்லி உழைப்பின் புகழ் பாடுகின்ற உன்னத திருநாள்தான் மே தினம். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது மே தினத்துக்கு விடுமுறையை அறிவித்தார். அதுபோல் தொழிலாளர் நல னுக்கென்று தனி அமைச்சர், தொழிலாளர் நல வாரியம் போன்றவை திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் திமுக மீது தொழிலாளர்களுக்கும் நிறைய பற்று உண்டு.

திமுக ஆட்சியில் இல்லா விட்டாலும் தொழிலாளர் நல னுக்கு எப்போதும் துணை நிற்கும் என்றார்.

தேர்தலை சந்திக்க தயார்

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது “தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் திமுக அதை சந்திக்குமா” என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் சரி அதனை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது” என்றார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in