பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ வழிகாட்டும் நிகழ்ச்சி: மாதா பொறியியல் கல்லூரியில் இன்று நடக்கிறது

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ வழிகாட்டும் நிகழ்ச்சி: மாதா பொறியியல் கல்லூரியில் இன்று நடக்கிறது
Updated on
1 min read

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை எங்கு படிக்கலாம், என்ன படிக்க லாம் என்று வழிகாட்ட ‘தி இந்து’தமிழ் நாளிதழ் மற்றும் மாதா பொறியியல் கல் லூரி இணைந்து இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வழி காட்டல் நிகழ்ச்சியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடு வார்கள். படிப்புகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக் கலாம், எந்த படிப்புக்கு என் னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் பேசுவார்கள்.

ஒரு படிப்பை தேர்ந்தெடுப்ப தற்கான காரணங்கள் என்ன வாக இருக்க வேண்டும் என்று தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.திருமலை மாணவர்களுடன் கலந்துரையாடுவார். பேராசிரி யர் பர்வீன் சுல்தானா, வெற்றி என்றால் என்ன என்று விளக்கி மாணவர்களை ஊக்கப்படுத் தும் வகையில் பேசவுள்ளார்.

கல்வியாளர் மற்றும் காலக்சி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பிரபா பொறியியல், மருத்துவ படிப்புகள் மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் அனைத்து படிப்புகள் பற்றியும், அவற்றுக் கான வேலை வாய்ப்புகள் பற்றியும் பேசவுள்ளார்.

கல்லூரி பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை களைவது எப்படி என்று ஆவணப் பட இயக்குநர் சாரோன் பேசவுள் ளார். இவர்களுடன் மாதா பொறியியல் கல்லூரி தலை வர் டாக்டர்.எஸ்.பீட்டர் இந் நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

பேருந்து வசதி

சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மாதா பொறி யியல் கல்லூரி பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. மணலி, திருவொற்றியூர், பாரிமுனை, பாடி, கிண்டி, ஆவடி, பூந்த மல்லி, அடையாறு, மடிப்பாக் கம், தாம்பரம், செங்கல்பட்டு, போரூர் ஆகிய இடங்களிலி ருந்து நிகழ்ச்சி அரங்குக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் தகவல்களுக்கு 9176990280 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in