Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM

அரசியலை விட்டு நான் ஓய்வு பெறவில்லை: தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் விளக்கம்

சில பத்திரிகைகள் நான் அரசியலை விட்டு ஓய்வுபெறுவதாக எழுதுகின்றன. ஆனால், நான் ஓய்வு பெறவில்லை. காங்கிரஸ் கட்சியை புதுப்பித்து, புத்துயிர் ஊட்ட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தனது மகனுமான கார்த்தி சிதம் பரத்தை ஆதரித்து, மானாமதுரை பகுதியில் ப. சிதம்பரம் திங்கள் கிழமை பிரச்சாரம் செய்தார்.

மானாமதுரை கல்குறிச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கி, கொன்னக்குளம், மேலப்பிடாவூர், ஆலம் பச்சேரி, கட்டிக்குளம், மூங்கில் ஊரணி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியிலும் நிறை, குறைகள் இருக் கின்றன. தவறு செய்தவர்கள் இருக்கின்றனர். தனிநபர் செய்யும் தவறை, ஒரு கட்சி செய்த தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. தவறு செய்தவர்களை காங்கிரஸ் கட்சி தண்டித்துள்ளது.

சில பத்திரிகைகள் அரசியலை விட்டு நான் ஓய்வு பெறுவதாக எழுதுகிறார்கள். அரசியலை விட்டு நான் ஓய்வு பெறவில்லை. எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் புதுப்பிக்கவேண்டும்.

புத்துயிர் ஊட்ட வேண்டும். இந்தியாவில் 83 கோடி இளைஞர்கள் உள்ளனர். தேர்தலில் சரிபாதி இளைஞர் களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில் கூறினேன். அதில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

மாமரத்தில் ஒரு கல்லைப் போட்டு இரண்டு மாங்காய் விழுந்தால் இரட்டிப்பு சந்தோஷம். உங்கள் வாக்கை கைச்சின்னத் தில் போடுங்கள். டெல்லியில் உங்களுக் காக பேசுவதற்கு ஒரு பிரதிநிதியும் (கார்த்தி சிதம் பரம்), தொகுதியில் உங்கள் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள மற்றொரு பிரதிநிதியும் (ப.சிதம்பரம்) கிடைப்பர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x