கோடையில் மின்வெட்டு: திருநின்றவூரில் 7 ஆண்டுகளாக தொடரும் அவலம்

கோடையில் மின்வெட்டு: திருநின்றவூரில் 7 ஆண்டுகளாக தொடரும் அவலம்
Updated on
1 min read

திருநின்றவூர் பகுதியில் அறிவிக் கப்படாத மின்வெட்டு அமல் படுத்தப்படுவதால் கோடை காலத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தலைநகர் சென்னைக்கு அருகில் வளர்ந்து வரும் பேரூராட் சியான திருநின்றவூரில் 35 ஆயிரத் துக்கு மேற்பட்டோர் வசிக்கிறார் கள். பிரசித்திப் பெற்ற கோயில்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இத்தகைய முக்கியத்துவம் கொண்ட திருநின்றவூர் பகுதி களில் கடந்த சில ஆண்டுகளாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

திருநின்றவூர் பேரூராட்சியின் ஒரு பகுதியில் சி.டி.எச்., சாலை, லட்சுமிபுரம், தாசர்புரம், கிருஷ்ணாபுரம், முருகேசன் நகர் உள்ளிட்ட 32 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. திருநின்றவூர் வடக்கு பிரிவு மின்சார வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. முன்பெல்லாம் குறைந்த நேரம் மட்டுமே மின் தடை இருக்கும். ஆனால், கடந்த சில மாதங் களாக தினமும் மின் தடை ஏற்படும் நேரங் களின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திருநின்ற வூர்- லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை, இரவு என நாள்தோறும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப் படுகிறது. சில நாட்களில், 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், மின்வெட்டு நேரமும் அதிகரித்துள்ளது.

திருநின்றவூர் பகுதிகளில் உள்ள மின் மாற்றிகளை முறை யாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் மின் வெட்டுக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளதாகவும் இது குறித்து, மின்சார வாரிய அதிகாரி களிடம் பல முறை புகார் தெரிவித் தும் பலனில்லை என்றார் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் சங்க நிர்வாகி முருகையன்.

இதுகுறித்து, மின்சார வாரிய உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இப்பிரச்சினையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in