

‘தி இந்து - எம்பவர்’ சார்பில் வேலைவாய்ப்பு தொடர்பான 2 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது. பல்வேறு பிரபல நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
‘தி இந்து’ ஆங்கில இதழின் ‘எம்பவர்’ இணைப்புப் பகுதியில் வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள் வெளியாகின்றன. ‘தி இந்து - எம்பவர்’ சார்பில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது. சதர்லேண்ட், ஹெச்.சி.எல்., ஐசிஐசிஐ வங்கி, டிவிஎஸ், இன்போசிஸ், ஜஸ்ட் டயல் டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை (மே 31, ஜூன் 1) ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும். இதில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் பயோ டேட்டா மற்றும் புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் (பயோடேட்டா மற்றும் போட்டோ) இருந்தால் பல்வேறு நிறுவனங்களின் தேர்வில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.