

`ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்கும் தகுதி ராகுலுக்கு இல்லை’ என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று கோவைக்கு வந்த அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், நானும் தனித் தனியாகப் பேசி வருகிறோம். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து விமர்சனம் செய்ய ராகுலுக்கு துளியும் தகுதி இல்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டு அவர் பேச வேண்டும்.
ஊழலில் திளைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொருளாதார பாடம் கற்க வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை.
வளர்ச்சி பாதையில் மோடி
தோற்றுப்போன கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண் டிருக்கும் தா.பாண்டியன் போன்ற வர்கள், இந்தியாவை வேக வேகமாக சிறந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென் றிருக்கும் மோடியின் ஆட்சியைப் பற்றி புரிந்துகொள்ள இன்னும் காலம் ஆகும்.
கோவை - பொள்ளாச்சி சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிதியை மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை வழங்க இருக்கிறது என்றார்.