ஜாஹிர் உசேன் கூட்டாளிகள் புழல் சிறையில் அடைப்பு

ஜாஹிர் உசேன் கூட்டாளிகள் புழல் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

சென்னையில் சிக்கிய ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹிர் உசேனின் கூட்டாளிகள் இருவரின் விவரங் களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பிடிபட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரயில் குண்டு வெடிப்பு குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது.

இலங்கை கண்டியைச் சேர்ந்த வரும், ஐஎஸ்ஐ உளவாளியுமான ஜாஹிர் உசேன், சென்னையில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் சிவபாலன் (39), முகமது சலீம்(37) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைத் தமிழரான சிவபாலன், சென்னை மேற்கு மாம்பலத்தில் தங்கி இருக்கிறார். வாரப் பத்திரிகை ஒன்றில் பணிபுரி வதாக போலியாக விசிட்டிங் கார்டு தயாரித்து வைத்திருந்தார். முகம்மது சலீம், தியாகராய நகரில் அலங்கார நகை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வருகிறார்.

பிடிபட்ட இருவரும் சென்னையின் பல இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரையும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை போலீஸார் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்தி ரேட் உத்தரவின்பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஜாஹிர் உசேன் உள்ளிட்ட மூன்று பேரிடமும் க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தகவல் எதுவும் கிடைக்காததால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in