

சொத்துக்குவிப்பு வழக்கி லிருந்து விடுதலையாகியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியது ஆரோக்கியமான அரசி யலுக்கு வழிவகுத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
தூத்துக்குடி வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தை சந்திப் பதற்காக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்த ரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது:
‘‘சொத்துக்குவிப்பு வழக் கிலிருந்து ஜெயலலிதா விடுதலை ஆகியுள்ள தையடுத்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளது ஆரோக் கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளது’’ என்றார்.
மேலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தமிழகத்தில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் அது தொடர்பாக யோசிப்போம்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.