

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொதுச் செயலர் என்.முத்து அமுதநாதன் கூறினார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது, விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் கண்டிக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்யும் உரிமை ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உண்டு. இதை யாரும் தடுக்க முடியாது.
நீதிமன்றங்களும், வழக்கறி ஞர்களும் பல்வேறு கால கட்டங் களில் ஆளும் கட்சியினர், அதி காரத்தில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்ட நிலையில் விமர்சனம் செய் ததையும், நீதிபதி குன்ஹாவை தரக்குறைவாக விமர்சனம் செய்தபோதும் பார் கவுன்சில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இப்போது மட்டும் தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது எனக் கூறுவதில் உள்நோக்கம் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தங்களது சொந்த அரசியலுக்கு பார் கவுன்சில் தலைவர் பதவியை பயன்படுத்தக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்யும் உரிமை ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உண்டு. இதை யாரும் தடுக்க முடியாது.