

இந்து முன்னணி அமைப்பின் 7-வது மாநில மாநாடு, ஜூன் 7-ம் தேதி கோவையில் நடை பெறவுள்ளது.
இந்து முன்னணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது: இந்து முன்னணி அமைப்பின் முதல் மாநிலத் தலைவர் தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக பாதுகாப்பு 7-வது மாநில மாநாடு கோவையில் ஜூன் 7-ல் நடைபெறவுள்ளது.
ராமகோபாலன், மலேசிய இந்து சேவா சங்க கிழக்கு ஆசிய அமைப்பாளர் ராமச் சந்திரன், சிங்கப்பூர் இந்து முன்னணி அமைப்பாளர் மணி கண்டன், பேரூர் ஆதினம், சிரவை ஆதினம், காமாட்சிபுரி ஆதினம், சிவலிங்கேஸ்வர சாமிகள் ஆகி யோர் பங்கேற்கவுள்ளனர்.