

காசிமேட்டில் இருதரப்பு மீனவர் களுக்கிடையே ஏற்பட்ட பிரச் சினையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது இதையடுத்து மீன வர்கள் இன்று அதிகாலை கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக கடலோரப் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங் களில் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது. இதையொட்டி மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வந்தனர்.
இந்நிலையில் 150 குதிரைச் சக்தி கொண்ட அதிவேக இயந் திரங்கள் கொண்ட படகுகள் மற்றும் 20 மீட்டரை விட அதிக நீளம் கொண்ட விசைப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத படகு களை மீன்பிடிக்க பயன்படுத்த சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரி வித்தனர். இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தங்களுக்கு திருப்தியில்லை என்றும், இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் சென்னை விசைப்படகு மீனவர் நல சங்கத்தி னர் அதிவேக, அதிநீளம் கொண்ட படகுகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே, ஒருதரப்பு மீனவர்களும் தங்க ளுடைய படகுகளை முகத்து வாரத்தில் கொண்டு வந்து நிறுத் தினர். இதனால் இருதரப்பு மீனவர் களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக மீன்வள துறை அதிகாரிகள் விசைப் படகு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மீன வர்கள் இன்று அதிகாலை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.