

வேளச்சேரியில் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேளச்சேரி சீனிவாசநகர் முதலாவது தெருவை சேர்ந்தவர் குமார் (69). விமானப் படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (65). நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு அனைவரும் குடும்பத் துடன் வெளியே சென்று இருந்தனர்.
இரவு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
இதுபற்றி வேளச்சேரி போலீஸில் குமார் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.