

கேரள அரசு தேக்கடியில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கு எதிரான வழக்கு விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கேரள அரசு இடுக்கி மாவட்டம் தேக்கடியில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பெரிய வாகன நிறுத்தம் ஒன்றை அமைத்து வந்தது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இடுக்கி மாவட் டத்தை சேர்ந்த எம்.எஸ்.தங்கப் பன், ஆபிரஹாம் தாமஸ் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் தமிழக அரசு தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக் கொண்டு, வாகன நிறுத்தம் அமைத்துவரும் இடம் தமிழகத் துக்கு கேரள அரசால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட பகுதி. இது முல்லை பெரியாறு அணை யின் நீர்பிடிப்பு பகுதி. இதில் வாகன நிறுத்தம் அமைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகிறது.
அவ்விடம் நீர்பிடிப்பு பகுதி இல்லை. கேரள அரசுக்கு சொந்த மான இடம் என்று அம்மாநில அரசு வாதிட்டு வருகிறது. உண்மை நிலையை அறிய, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிபுணர்களை நியமித்து ஆய்வ றிக்கை தாக்கல் செய்ய தென் னிந்திய அமர்வு உத்தரவிட் டிருந்தது
இந்த வழக்கு, 1-ம் அமர் வின் நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பேரா சிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகி யோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில் ஆஜரான வழக் கறிஞர் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த விசாரணையின்போது ஆய் வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வின் உறுப்பி னர்கள், வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வாகன நிறுத்தம் அமைத்து வரும் இடம் தமிழகத்துக்கு கேரள அரசால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட பகுதி. இதில் வாகன நிறுத்தம் அமைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகிறது.