

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க இழுத்துச் செல்லும் டிராலி வகை புத்தகப் பைகளின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பல பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. புதிய வகுப்புக்கு செல்லும் மாண வர்களுக்கு புதிதாக சீருடை, நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, பென்சில் பாக்ஸ் ஆகிய வற்றை வாங்கிக்கொடுத்து மகிழ்ச் சியாக பள்ளிக்கு அனுப்ப பெற் றோர் விரும்புகின்றனர். முரண்டு பிடிக்கும் சில மாணவர்கள் கூட புதிதாக கிடைக்கும் எல்லா வற்றையும் எடுத்துச்செல்ல விரும்புவர். இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் விரும்பும் வகையில் புதிய வடிவில் புத்தகப் பைகள் மற்றும் இதர பொருட்கள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.
மழலையர் முதல் மேல்நிலை பள்ளி வரை
தற்போது மழலையர் பள்ளிக ளுக்குச் செல்லும் குழந்தை களுக்காக சோட்டா பீம், டுவீட்டி, மிக்கி மவுஸ் ஆகிய கார்ட் டூன் கதாபாத்திரங்கள் வடிவி லான பைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. முதல் வகுப்பிலி ருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக ஸ்பைடர் மேன், பார்பி, ஆங்கிரி பேர்ட் படங்கள் இடம்பெற்றுள்ள பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வகுப்பு மாறும் போதும் மாணவர்களின் புத்தகச் சுமையும் அதிகரித்து வருகிறது. பல பள்ளிகளில் அனைத்து பாடப் புத்தகங்களையும் மாண வர்கள் கொண்டு செல்ல வேண் டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையைப் போக்கும் வகையில் இழுத்துச் செல்லும் வசதி கொண்ட டிராலி புத்தகப் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மழலையர் பள்ளி குழந்தைகள் முதல் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கு ஏற்ற வகையி லான இந்த புதிய வகை டிராலி பைகள் தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன.
‘‘பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை புத்தகப் பைகள் அறி முகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சந்தையில் அதிக அளவில் டிராலி வகை பைகள் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. இந்த வகை பைகளின் ஆரம்ப விலை ரூபாய் ஆயி ரம் ஆகும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில், புதிய டிசைன்க ளில் பைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன'' என்று நியூ ஜோதி பை தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் அஜ்மல் கான் கூறினார்.