Published : 19 May 2015 08:02 AM
Last Updated : 19 May 2015 08:02 AM

100 வயது வரை வாழ்வேன்: கருணாநிதி

தமிழகத்துக்கு ஏற்பட்ட மாசு மருவைப் போக்கி நிலையான ஆட்சி அமைக்க எங்கள் பணி தொடரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

முத்தமிழ்ப் பேரவையின் 37-வது ஆண்டு விழா சென்னை டி.என்.ராஜ ரத்தினம் அரங்கில் நேற்று நடந் தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

ஏழை, எளிய, நடுத்தர, தாழ்த்தப் பட்ட மக்கள் என அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து வெற்றி பெற வியூகம் வகுப்போம். இது தேர்தல் பேச்சல்ல. தமிழர்கள் தேறுவதற்கான பேச்சு. நான் 100 வயது வரை வாழ்வேன். அந்த விழாவை இந்த கலையரங்கில் கொண்டாட நீங்கள்தான் என் தளர்ச்சியைப் போக்க வேண்டும். தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மாசு மருவைப் போக்க பாடுபடுவோம். தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்க நமது பணி தொடரும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு ‘இயல் செல்வம்’, பேட்டைவாய்த்தலை எஸ்.சண்முகத்துக்கு ‘ராஜரத்னா’ விருது, எண்கண் இ.ஆர்.சின்னையாவுக்கு நாதஸ்வர வித்வான் விருது, திருக்கடையூர் டி.எஸ்.முரளிதரனுக்கு ‘நாதஸ்வர செல்வம்’ விருது, சோபனா விக்னேஷுக்கு ‘இசைச் செல்வம்’ விருது, திருச்சி ஆர்.கணேசனுக்கு ‘தவில் செல்வம்’ விருது, வேணுபுரி எம்.ஆர்.சீனிவாசனுக்கு ‘மிருதங்க செல்வம்’ விருது வழங்கப்பட்டன. முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை தலைவர் வழுவூர் ரவி, கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம், டி.ஆர்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x