

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(35). ஏசி மெக்கா னிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி பாலகிருஷ்ணன் சரிவர பணிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதை தட்டி கேட்டதால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த அண்ணன் தலையில் அம்மி கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப் படுகிறது.
சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பாலகிருஷ் ணனை தேடி வருகின்றனர்.