குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு ஜூன் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் சென்னை தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டு பெறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது டிஎன்பிஎஸ்சி குறைதீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் (1800-425-1002) மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்'' என்று ஷோபனா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in