மாவோயிஸ்ட்கள் டைரியில் தமிழக அலைபேசி எண்கள்: கோவையில் ஆதரவாளர்கள் 3 பேரிடம் விசாரணை

மாவோயிஸ்ட்கள் டைரியில் தமிழக அலைபேசி எண்கள்: கோவையில் ஆதரவாளர்கள் 3 பேரிடம் விசாரணை
Updated on
2 min read

கோவையில் கைதான மாவோயிஸ்ட்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் அலைபேசி எண்களே அதிகம் இருப்பதால், அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இங்கு வளர்ந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அந்த டைரியில் உள்ள எண்களைக் கொண்டு மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் நேற்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த 4-ம் தேதி, மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் காவலில் எடுத்து, கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா கண்ணனூர் பகுதியில் கல்குவாரியில் நடந்த தாக்குதல், அகழியில் வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்டது, பாலக்காட்டில் கே.எஃப்.சி. கடை தாக்குதல், வயநாட்டில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் குறித்து கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவோயிஸ்ட் களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள எண்களைக் கொண்டு சந்தேகத்தின் அடிப்படை யில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என 3 பேரை பிடித்து, நேற்று முதல் கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை கியூ பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்து, மாவோயிஸ்ட்களிடம் நடந்து வரும் விசாரணை தொடர் பாக எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது எனவும் கூறிவிட்டனர்.

விசாரணையின்போது, முக்கிய ஆவணமாக டைரி ஒன்று கைப் பற்றப்பட்டுள்ளது. அந்த டைரியில் சுமார் 50 அலைபேசி எண்கள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த அலைபேசி எண்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டத் தைச் சேர்ந்தவர்களின் எண்களே அதிகம் இருப்பதால் மாவோயிஸ்ட் இயக்க வேலைகளுக்கு இங்கே ஒருங்கிணைப்புக்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனால், கேரள, கர்நாடக வன எல்லைகளையொட்டி அமைந்துள்ள கோவையின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட் குழுவின் செயல்பாடுகள் இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கியூ பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

திருப்பூரில் அவர்கள் தங்கியி ருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள பெயர்கள், தொலைபேசி எண்களைக் கொண் டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் 16-ம் தேதி வரை மாவோ யிஸ்ட்கள் 5 பேரிடம் விசாரணை நடத்த அவகாசம் இருப்பதால், மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவோயிஸ்ட் கோஷம்

கடந்த 6-ம் தேதி மாவோ யிஸ்ட்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றிருந்த போது, பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள கியூ பிரிவு அலுவலகம் முன்பாக இரு சக்கர வாகனத்தில் இருந்த படியே, மாவோயிஸ்ட் இயக் கம் தொடர்பான கோஷங் களை எழுப்பிய 3 பேர் மீது கியூ பிரிவு போலீஸார் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீ ஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in