

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில குழு கூடி முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இங்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தங்கள் கட்சி இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில குழு கூடி முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று அவர் பேசும்போதும், "தேர்தலைக் கண்டு பாஜக ஒருபோதும் அஞ்சியதில்லை" என தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.