

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் புதிதாக வாங்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள், பல மாதங்களாக பணிமனைகளில் தொடக்க விழாவுக்காக காத் திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு போக்கு வரத்துக் கழகம், 8 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இவற் றில் ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப் படுகின்றன. கடந்த 4 ஆண்டு களில் மொத்தம் 7,153 புதிய பேருந்துகளை ரூ.1,354.21 கோடியில் வாங்க ஆணை யிடப்பட்டது. அதில், இதுவரை 4,572 புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட்டு வரகின்றன.
இந்நிலையில், புதிதாக வாங் கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், தொடக்க விழாவுக்காக பல மாதங்களாக அந்தந்த பணிமனைகளிலேயே காத்திருப்பதாக கூறப்படுகிறது. கோவையை தவிர்த்து சென்னை, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட 7 போக்குவரத்து கழகங்களின் பெரிய பணிமனைகளில் இந்தப் பேருந்துகள் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தொமுச பொரு ளாளர் நடராஜனிடம் கேட்டபோது, ‘‘சென்னை குரோம்பேட்டை பணிமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிமனைகளில் புதியதாக பாடி கட்டப்பட்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 7 மாதங்களாக இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், டயர் போன்ற உதிரி பாகங்கள் சேத மடைந்துள்ளன. புதிய பேருந்துகள் இயக்கப்படாததால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பும் ஏற்படுகிறது. எனவே, புதிய பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
அதிகாரிகள் மறுப்பு
இது தொடர்பாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய பேருந்துகள் பணிமனைகளில் பல மாதங்களாக காத்திருக்கவில்லை.
இன்னும் சில புதிய பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, ஒட்டுமொத்தமாக பணிகள் முடிந்தவுடன் புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்’’ என்றனர்.