

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 1 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள தாக மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. அதன் படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங் களிலும் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து விடைத்தாள் நகல், மறுகூட்டல் சிறப்பு அலுவலர் (மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர்) அமுதவல்லி நேற்று கூறியதாவது: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்காக தமிழகத்தில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பித் தவர்களின் விடைத்தாள்கள் இன்று முதல் ஸ்கேன் செய்யப்பட உள்ளன. அதன் பின்னர் 10 நாட்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைத்தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணைக் கொண்டு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.