

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரியில் இருவர் 500க்கு 500 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.
புதுச்சேரி, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 19425 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை நேற்று காலை 11.05க்கு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 18,054 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.94 ஆகும். கடந்த ஆண்டைக்காட்டிலும் இது 1.26 சதவீதம். லாஸ்பேட்டை புனித குளுனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.கிறிஸ்ஷா, மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.யோகேஷ்வர் ஆகியோர் 500-க்கு 500 மதிப்பெண் களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற் றுள்ளனர். பிரெஞ்சு பாடத்தை முதன்மையாக கொண்டு இருவரும் முதலிடம் பிடித்துள் ளனர்.
499 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை 12 பேர் பெற்றுள்ளனர். 12 பள்ளிகளைச் சேர்ந்த 33 மாணவர்கள் 498 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடம் பெற்றுள்ளனர்.