பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மேளா: 174 பயனாளிகளுக்கு ரூ.84 கோடி கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மேளா: 174 பயனாளிகளுக்கு ரூ.84 கோடி கடன்
Updated on
1 min read

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள கீதா பவனில் கடன் மேளா நடத்தப்பட்டது.

இது குறித்து வங்கி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நடைபெற்ற கடன் மேளாவில் கள பொது மேலாளர் ஆர்.கே.சாட்டர்ஜி, சென்னை வட்டார தலைவர் நசிம் அகமது ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வீட்டுக்கடன், கார் கடன், கல்விக் கடன், சிறுதொழில் கடன் என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.84.46 கோடி அளவுக்கு கடன் பெறுவதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கள பொது மேலாளர் ஆர்.கே.சாட்டர்ஜி பேசும்போது, “வரும் ஜூன் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பருவகால கடன் மேளாக்கள் நடத் தப்படவுள்ளன. அனைத்து வாடிக்கை யாளர்களும் இதை பயன் படுத்திக்கொள்வது மட்டுமின்றி, நண்பர் கள், உறவினர்கள் அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும். டிசம்பர் 31 தேதி வரை பெறப்படும் வீடு, கார் கடன்களுக்கு பிராசசிங், ஆவணக் கட்டணங் கள் முற்றிலும் ரத்து செய் யப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in