

மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் (பிஎஸ்பி) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை பெருமுதலாளி கள்தான் உருவாக்கியுள்ளனர். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது இந்தியாவில் வாழும் 60 சதவீத விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை என்பதை கருத்தில்கொண்டு எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார். முதல்கட்ட மாக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், கிரா மங்கள்தோறும் மக்கள் போராட்டமாக நடத்த மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபி நாத், தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.