கொடைக்கானலில் பாறை உருண்டு மரம் முறிந்தது: 3 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு; 8 பேர் மயக்கம்

கொடைக்கானலில் பாறை உருண்டு மரம் முறிந்தது: 3 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு; 8 பேர் மயக்கம்
Updated on
2 min read

கொடைக்கானல் அருகே கொட்டும் மழையில் வட்டகானல் அருவியை வேடிக்கை பார்த்தபோது ராட்சத மரம் முறிந்து விழுந்து பெங்களூருவைச் சேர்ந்த பெண் உட்பட 3 சுற்றுலாப் பயணிகள் உடல் நசுங்கி பலியாயினர்.

கொடைக்கானல் அருகே வட்டகானல் அருவியில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழை யால் 15 ஆண்டுகளுக்குப் பின், அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

இந்த அருவியைப் பார்க்க கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த வியாபாரிகள் சங்க நிர்வாகி இளங்கோ(45), அவரது மனைவி, குழந்தைகள், பெங்களூருவைச் சேர்ந்த கிரண்குமார், அவரது மனைவி அஜய் சுரேகா(32), 2 குழந்தைகள், சென்னை மண லியைச் சேர்ந்த வினோத்(27) மற்றும் சென்னை நர்சிங் கல்லூரி மாணவியர் உட்பட 30 சுற்றுலாப் பயணிகளை வழிகாட்டிகள் நேற்று காலை அழைத்துச் சென்றுள்ளனர்.

வட்டகானல் அருவியில் கொட்டும் தண்ணீரைப் பார்த்து குதூகலமடைந்த பலர் புகைப்படம் எடுத்தனர். சிலர் சாலையோரம் நின்று, அருவியை ரசித்துக் கொண் டிருந்தனர். அப்போது சாலை யோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென சாய்ந்து சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்தது.

இதில் வடலூரைச் சேர்ந்த இளங்கோ, பெங்களூருவைச் சேர்ந்த கிரண்குமாரின் மனைவி அஜய் சுரேகா, சென்னை மணலி யைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மரத் துக்கு அடியில் சிக்கினர். மற்றவர்கள் அலறியடித்து தப்பியோடினர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 3 பேர் மயக்கம் அடைந்தனர். மரத்தின் அடியில் சிக்கியவர்களை, மற்றவர்கள் மீட்கப் போராடினர். இதில் அஜய் சுரேகா, வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தி இளங்கோ உள்ளிட்ட 9 பேரை மீட்டு கொடைக் கானல் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் இளங்கோ பலியானார்.

வட்டகானல், பெருமாள் மலை, பேரிஜம் உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதியில் உள்ள சுற்று லாத் தலங்களுக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். சில வழிகாட்டிகள், சுற்றுலாப் பயணிகளை வனத் துறை அனுமதியின்றி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இயற்கை எழில்சார்ந்த இடங்களுக்கு அழைத் துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து செல்கின்றனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் மண் பிடிமானம் இல்லாத மரங்கள், பாறைகள் உள்ளன. மழையில் இவை எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. நேற்று இவ்வாறு வட்டகானல் நீர்வீழ்ச்சியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றபோதுதான் மரம் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

400 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்

சேலம் மாவட்டம், கண்ணக்குறிச்சியைச் சேர்ந்தவர் மோகன் (52). இவர் தனது உறவினர்களுடன், தனியார் பஸ்ஸில் கேரள மாநிலத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்றார். சேலத்தைச் சேர்ந்த கோபி (36) என்பவர் பஸ்ஸை இயக்கினார்.

எர்ணாகுளம் அருகே கரடிப்பாறை மலைப் பாதையில் நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த மற்றொரு பஸ்ஸுக்கு வழிவிட முயன்றபோது, எதிர்பாராத விதமாக 400 அடி பள்ளத்தில் சொகுசு பஸ் உருண்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த மோகன், தாமோதரன்(32) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் ஓட்டுநர் கோபி, விஷ்ணு (22), வருண்(16), சிவசக்தி(40), செல்வம்(52), வைஷ்ணவி(16) உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அடிமாலி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து அடிமாலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in