Last Updated : 13 May, 2015 07:44 AM

 

Published : 13 May 2015 07:44 AM
Last Updated : 13 May 2015 07:44 AM

கூடுவாஞ்சேரியில் 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணி: அரசின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை பெற்றது கட்டுமான நிறுவனம்

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள், 4 ஆண்டுகளை கடந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருவ தால் சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட் களின் விலை உயர்வால் மேலும் அதிக தொகை தேவைப்படுவதாக பணியை மேற்கொண்டுள்ள கட்டு மான நிறுவனம் கோருவதாக கூறப்படுகிறது. இதை ஏற்காத அரசு தரப்பு, அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனினும், அந்த நோட்டீஸுக்கு எதிராக கட்டுமான நிறுவனம் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள, கூடுவாஞ்சேரி-மாடம் பாக்கம் சாலையின் குறுக்கே செங்கல்பட்டு-தாம்பரம் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. அதனால், அங்கு ரயில்வே கிராசிங் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் செல்வதற்காக தினமும் 40 முறைக் கும் மேலாக இந்த கேட் மூடி திறக்கப்படுகிறது. இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து, ரயில்வே மேம்பாலம் அமைக்க 2010-ம் ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கப் பட்டு, 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க கால நிர்ணயம் செய்யப் பட்டது.

நெடுஞ்சாலைத் துறை யினர் மற்றும் ரயில்வே துறை யினர் ஒப்பந்ததாரர் மூலம், அப்பகுதியில் 750 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்ட வாளம் அமைந்துள்ள பகுதியில் மேம்பால பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளதாக கூறி, பொது மக்களின் பயன்பாட்டுக்கான சாலையை ரயில்வே துறையினர் மூடினர். அதனால், கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றிக் கொண்டு நகரப் பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தின் அருகில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைத்து போக்குவரத்து பயன் பாட்டுக்கு தற்காலிகமாக திறந்தனர். ஆனால், இதிலும் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. இந்த சுரங்கப் பாதையும் மழைக்காலங்களில் மழைநீர் நிரம்பி குளம் போல மாறிவிடுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேம்பால பணி மற்றும் சுரங்கப் பாதை பணிகள், பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகள் ஆகியும் 60 சதவீத பணிகள்கூட முடிவடையாத நிலையில் உள்ளது. அதனால், அப்பகுதி வாசிகள் ரயில்வேகேட் பகுதியை கடக்க பல மணிநேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை மண்டல வட்டாரங்கள் கூறியதாவது: கூடு வாஞ்சேரி மேம்பால பணி களை ஒப்பந்த முறையில் மேற் கொண்டுள்ள கட்டுமான நிறுவனத் தினர், ‘ரயில்வே துறையினரின் தாமதத்தால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் மேம்பால பணிகளை முடிக்க இயலவில்லை. தற்போது கட்டுமான பொருட்களின் விலை கூடியுள்ளதால், அதிக தொகை தேவைப்படுவதாக’ தெரி விக்கின்றனர். ஆனால், அரசு இதை ஏற்கவில்லை. அதனால், மேம்பால பணி தாமதமாக நடை பெறுகிறது. இதையடுத்து, கட்டு மான நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை மண்டல மேம்பால பணிகள் பொறியாளர் சந்திரசேகரன் கூறியதாவது: தனியார் கட்டுமான நிறுவனம், மேம்பால கட்டுமான பணியை தாமதமாக செய்து வருகிறது. இதனால், ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம் நோட்டீஸ் மீதான நடவடிக்கையை செயல்படுத்த, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளது.

இதனால், மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட சுரங்கப் பாதையும் மழைக்காலங்களில் மழைநீர் நிரம்பி குளம் போல மாறிவிடுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x